மூங்கில்துறைப்பட்டு பகுதியில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தேவி நகர் மற்றும் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் குடிநீர் இணைப்பிற்காக குழாய்கள் அமைக்கப்பட்டது. இருப்பினும் தற்போது வரை குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் காட்சிப்பொருளாகவே உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லை. எனவே குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.