கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு குடிநீர் கொண்டு செல்ல குழாய் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழாய் உடைந்து சேதமடைந்து இருக்கிறது. இதனால் லிட்டர் கணக்கில் குடிநீர் வீணாகி வருகிறது. எனவே குழாயை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.