நத்தம் அருகே உள்ள கோபால்பட்டியில் திண்டுக்கல் சாலையில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் அடிக்கடி உடைந்து விடுகிறது. இதனால் குழாயில் இருந்து வெளியேறும் குடிநீர் சாலையில் ஆறாக ஓடி வீணாகிறது. கோடைகாலம் நெருங்குவதால் குடிநீர் வீணாவதை தடுப்பது அவசியம். எனவே குழாய் உடைப்புக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.