புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள அனவயல் எல்.என்.புரத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செங்கொல்லை, கரிஞான் தெரு, பாச்சிகொட்டான் தெரு, வதங்கன் தெரு, ஆர்ச் பகுதியில் உள்ள சுமார் 500 குடும்பத்தினர் பயன் அடைந்து வருகின்றனர். இந்தநிலையில் குடிநீர் தொட்டியில் உள்ள 4 தூண்களிலும் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.