கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்களம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு குடிநீா்தொட்டி, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இருந்தும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்படாமல் இருந்தது. இதனால் குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்த செய்தி தினத்தந்தி புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் அங்கன்வாடி மையத்திற்கு குடிநீர் இணைப்பு கொடுத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.