கச்சிராயப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மினி குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் தற்போது அந்த மினி குடிநீர் தொட்டி சேதமடைந்துள்ளது. இதனால் குடிநீர் கிடைக்காமல் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகிறார்கள். இதை தவிர்க்க மினி குடிநீர் தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.