12 April 2023 5:12 PM GMT
#30843
சாலையில் மண் குவியல்
திருப்பூர் வடக்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
சாலையில் மண் குவியல்
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட போயம்பாளையம் பிரிவு பி.என்.சாலையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலை வரை சாலையின் தடுப்புச்சுவர் அருகில் அதிகளவு மண் குவியல் காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் செல்லும் நிலை உள்ளது. சில நேரங்களில் மண்குவியல் காரணமாக இருசக்்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுகிறார்கள். இதனால் பின்னால்வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் மண்குவியலை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள்கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவக்குமார், திருப்பூர்.