- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விபத்து ஏற்படுத்தும் வேகத்தடை
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி வழியாக தினமும் எண்ணற்ற டிப்பர் லாரிகள் சிமெண்டு ஆலைகளுக்கு சுண்ணாம்புக்கல் எடுத்து செல்கின்றன. மேலும் பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து எம் சாண்ட், கம்பிகள், கருங்கல் ஆகியவைகளை வி.கைகாட்டி வழியாக ஜெயங்கொண்டம் மற்றும் பல்வேறு ஊர்களுக்கு கனரக லாரிகள் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. இந்நிலையில் வி.கைகாட்டியில் ஜெயங்கொண்டம் பஸ் நிறுத்தத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சென்டர் மீடியனுக்கு கிழக்கு பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேகத்தடை ஒன்றை நெடுஞ்சாலைத்துறை அமைத்தனர். வேகத்தடையில் வெள்ளை நிற பட்டைகள் இல்லை. மேலும் வேகத்தடை இருப்பதற்கான அறிவிப்பு பலகை ஏதுமில்லை. இதனால் வெளிமாவட்டங்களிலிருந்து இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வி.கைகாட்டியில் உள்ள வேகத்தடையில் வெள்ளை நிற கோடு அடிப்பதுடன், வேகத்தடை இருப்பதற்கான அறிவிப்பு பலகை அமைத்து விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.