6 Oct 2024 11:04 AM GMT
#50319
குண்டும், குழியுமான சாலை
திருச்சி
தெரிவித்தவர்: ெபாதுமக்கள்
திருச்சி மாநகராட்சி 64-வது வார்டு தங்கையா நகர், 12-வது குறுக்குத்தெருவில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த தெருவில் பகல் மற்றும் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் நடப்பதற்கே லாயகற்ற நிலையில் உள்ளது. தற்போது மழை காலம் என்பதால் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.