8 Sep 2024 12:14 PM GMT
#49644
குண்டும் குழியுமான சாலை
நயப்பாக்கம்
தெரிவித்தவர்: நாகேந்திரன்
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் பாப்பரம்பாக்கம் சாலை முதல் நயப்பாக்கம் சாலை வரை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் தாங்கள் செல்லும் இடத்திற்கு சரியான நேரத்தில் செல்ல முடியவில்லை. மேலும், திருவள்ளூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி செல்லும் பஸ்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, அந்த பகுதி மக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.