9 Jun 2024 1:25 PM GMT
#47327
உயரமான வேகத்தடை
சாத்தம்பாடி
தெரிவித்தவர்: துரைராஜ்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், சாத்தம்பாடி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி அருகே புதிதாக 2 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தடைகள் மிகவும் பெரிதாக இருப்பதால் சிறிய வாகனங்கள் அதன் மீது ஏறி இறங்குவதற்கு மிகவும் சிரமப்படுகின்றன . மேலும் அந்த இடத்தில் வேகத்தடை இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. வேகத்தடையின் மீது வெள்ளை வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.