9 Jun 2024 1:02 PM GMT
#47323
சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்
அரியலூர்
தெரிவித்தவர்: சரவணன்
அரியலூர் ஒன்றிய அலுவலகம் முன்புறம் உள்ள பங்களா ரோடு மிகவும் குறுகலாக காணப்படுகிறது. இந்த சாலையோரம் பல்வேறு கடைகள் இயங்கி வருவதால், அந்த கடைகளுக்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை சாலையின் நடுவே நிறுத்துகின்றனர். இதனால் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஒதுங்கி நிற்பதற்கும் இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.