19 May 2024 3:44 PM GMT
#46828
சுரங்கபாதையில் தேங்கும் மழைநீர்
தர்மபுரி
தெரிவித்தவர்: Sivashanmugam
தர்மபுரி- பெங்களூரு இடையே பாலக்கோடு வழியாக புதிய 4 வழி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் கீழ் சோகத்தூர் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. தர்மபுரி பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்ததால் இந்த சுரங்கப்பாதையில் மழைநீர் அதிக அளவில் தேங்கி நிற்கிறது. இதனால் சுரங்கப்பாதையில் நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே இந்த சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காத வகையில் வடிகால் வசதி ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.