5 May 2024 5:43 PM GMT
#46516
விபத்துக்கு வழிவகுக்கும் குழி
திருப்பூர் வடக்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டில் இருந்து வடுகபாளையம் செல்லும் இணைப்பு சாலை, உடுமலை - பொள்ளாச்சி ரோட்டுடன் இணைகிறது. தற்போது உடுமலை ரோட்டில், பாலம் கட்டுமான பணி நடந்து வருவதால் வாகனங்கள் இந்த ரோட்டைமாற்றுபாதையாக பயன்படுத்தி வருகின்றன. அந்த ரோட்டில் வடுகபாளையம் அருகே குழி ஏற்பட்டு உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாய நிலை உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படுதவதற்கு முன்பாக அந்த குழியை மூடி சாலையை சீரமைக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகள், பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.