25 Feb 2024 12:03 PM GMT
#44689
புகாருக்கு உடனடி தீர்வு
நடுக்கல்லூர்
தெரிவித்தவர்: முருகன்
நெல்லை அருகே நடுக்கல்லூரில் தென்காசி மெயின் ரோடு, சேரன்மாதேவி மெயின் ரோடு சந்திப்பு பகுதியில் சாலை சேதமடைந்து ராட்சத பள்ளமாக உள்ளது என்று முருகன் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதனை உடனே சீரமைத்தனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.