31 Dec 2023 5:06 PM GMT
#43370
சேதமடைந்த கால்வாய்
சருத்துப்பட்டி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரியகுளம் தாலுகா சருத்துப்பட்டி கிராமம் 12-வது வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் கால்வாய் நிரம்பி கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். இந்த கால்வாயில் ஏற்பட்டுள்ள சேதத்தை சரி செய்ய வேண்டும்.