10 Sep 2023 6:13 PM GMT
#39705
மந்தகதியில் சாலை சீரமைப்பு பணி
கன்னியாங்குப்பம்
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
உளுந்தூர்பேட்டை அருகே கன்னியாங்குப்பம் கிராமத்திலிருந்து பவழங்குடி செல்லும் சாலையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் பணிகள் மிகவும் மந்தகதியில் நடைபெற்று வருவதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.