14 May 2023 11:38 AM GMT
#32571
ஆபத்தான பாதாள சாக்கடை மூடிகள்
திருவாரூர்
தெரிவித்தவர்: Palvannan
திருவாரூர் துர்க்காலயா சாலையின் நடுவே பாதாள சாக்கடை குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை மூடுவதற்காக போடப்பட்டுள்ள மூடிகள் சாலையின் மட்டத்தில் இருந்து உயரமாக அமைந்துள்ளன. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் அந்த மூடிகளால் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். இதன்காரணமாக அந்த வழியாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடை மூடிகளை சாலை மட்டத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.