7 May 2023 2:48 PM GMT
#32231
சாலை சீரமைக்கப்படுமா?
திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவாரூர்-மன்னார்குடி சாலையில் வேலக்குடி சாலை வளைவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக வருபவர்கள் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இதன்காரணமாக அந்த வழியாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.