22 March 2023 10:53 AM GMT
#29420
வேகத்தடை வேண்டும்
திருவாரூர்
தெரிவித்தவர்: Mr. Raja
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் உப்பூர் அருகே சாலையில் வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் சாலையை கடக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த பகுதியில் விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உப்பூர் அருகே உரிய இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், உப்பூர்