1 Jan 2023 2:11 PM GMT
#24699
ஆபத்தான சாலை
சீர்காழி
தெரிவித்தவர்: Palvannan
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பஸ் நிலையம் அருகே பொதுப்பணித்துறை அலுவலகம் செல்லும் சாலை ஆபத்தான நிலையில் உள்ளது. குறிப்பாக சாலையின் ஓரங்கள் பள்ளமாக உள்ளன. இதனால் சாலையை வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் கடந்து செல்கின்றனர். மேலும், சாலையோரத்தில் உள்ள ஆபத்தான பள்ளத்தினால் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?