9 Nov 2022 11:15 AM GMT
#21211
சாலை அமைக்க வேண்டும்
முதுகுளத்தூர்
தெரிவித்தவர்: Thiru
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் 6-வது வார்டில் உள்ள சாலைகள் சேதமடைந்து மண்ரோடாக காட்சியளிக்கிறது. சிறு மழைக்கே சாலையானது சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள சாலையை தார்ச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.