9 Feb 2025 12:51 PM GMT
#53638
சேதமடைந்த மின் கம்பம்
கும்பகோணம்
தெரிவித்தவர்: Mr. Raja
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகில் முத்துப்பேட்டை சாலையும் கல்லணைகால்வாய் வாய்க்காலும் சேருமிடத்தில் சாலையோரம் மின் கம்பம் உள்ளது. அந்த மின்கம்பத்தின் உச்சியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் பட்டுக்கோட்டை