17 Sep 2023 3:00 PM GMT
#40040
அரசு பெண்கள் பள்ளியில் நாய் தொல்லை
பல்லடம்
தெரிவித்தவர்: வெற்றிவேல்
அரசு பெண்கள் பள்ளியில் நாய் தொல்லை
பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1,200 மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப்பள்ளியின் பின்புறம் சுற்றுச்சுவர் இல்லாமல் முள் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தெருநாய்கள் வசிப்பிடமாக பள்ளி இருக்கிறது. நாய்கள், விஷ ஜந்துக்கள் பள்ளி வளாகத்திற்குள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் மாணவிகள் அச்சத்துடன் பள்ளிக்கு வந்து செல்லும் அவல நிலை தான் உள்ளது. மேலும் பள்ளியின் பின்புறம் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளதால் அதன் வழியாகவும் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளது. எனவே பள்ளிக்கு பின்புறம் சுற்றுச்சுவா் ்அமைக்கவும், சேதமடைந்துள்ள ஜன்னல்களை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெற்றிவேல்,பல்லடம்
9867635632