17 May 2023 2:25 PM GMT
#32841
தொற்று நோய்பரவும் அபாயம்
தஞ்சாவூர்
தெரிவித்தவர்: Mr. Raja
பட்டுக்கோட்டை ஒன்றியம் துவரங்குறிச்சி முக்கூடு சாலை, மீன் மார்க்கெட் ரோடு போன்ற இடங்களில் மருத்துவக் கழிவுகளும் ,குப்பைகளும் தேங்கி கிடக்கிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபயாம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், பட்டுக்கோட்டை