வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2025-11-02 12:18 GMT

ஓமலூர் தாசில்தார் அலுவலகம் அருகில் அரசு மருத்துவமனை, பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், போலீஸ் நிலையம் ஆகியவை உள்ளன. இந்த நிலையில் தாசில்தார் அலுவலகம் அருகில் வேகத்தடை இல்லாததால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் வேகத்தடை அமைத்து வர்ணம் பூசி, எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

-சசிகுமார், தாரமங்கலம்.


மேலும் செய்திகள்