3 March 2024 12:48 PM GMT
#44876
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?.
மயிலாடுதுறை
தெரிவித்தவர்: Mr. Raja
மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூரில் தான்தோன்றீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான தரிசு நிலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு எதிரே உள்ளது. இந்த இடத்தில் கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சமப்ந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கோவில் நிலத்தில் உள்ள கருவேலமரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
பொதுமக்கள், மயிலாடுதுறை