27 Sep 2023 1:59 PM GMT
#40618
சாலை சீரமைக்கப்படுமா?
திருத்துறைப்பூண்டி
தெரிவித்தவர்: Mr. Raja
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து வலங்கைமான் செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மன்னார்குடி