9 Nov 2022 4:20 PM GMT
#21348
சேற்றில் மிதக்கும் சாலை
ஆவடி
தெரிவித்தவர்: சந்திரசேகரன்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் மேற்கு பகுதி 10-வது தெருவில் இதுவரை சாலை வசதி இல்லாததால் அந்த பகுதி முழுவதும் சேறும் சகதியமாக காட்சி அளிக்கிறது. அந்த சாலை வழியாக வாகனத்தில் செல்பவர்கள் மிக சிரமத்துடன் செல்கின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளும் நடந்து செல்ல முடியாமல் கஷ்டப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.