6 Sep 2023 2:32 PM GMT
#39404
கட்டிட கழிவுகள் அகற்றப்படுமா?
பசவேஷ்வராநகர்
தெரிவித்தவர்: பிரமோத்
பெங்களூரு பசவேஷ்வராநகர் அம்பேத்கர் மைதான சாலையில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையை காலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நடைபாதையின் அருகே குடியிருப்பு ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதற்காக நடைபாதையில் கட்டிட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் பாதசாரிகள் சாலையில் இறங்கி நடந்து செல்லும்போது விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவற்றை அகற்ற வேண்டும்.