26 March 2023 12:52 PM GMT
#29676
சாலையை சரிசெய்ய வேண்டும்
காஞ்சீபுரம் மாவட்டம், உத்திரமேரூர்
தெரிவித்தவர்: பாபு
காஞ்சீபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம் கட்டியாம்பந்தல் கிராமம், மேட்டுத்தெருவில் கடந்த மாதம் பேவர் பிளாக் கற்கள் கொண்டு சாலை போடப்பட்டது. ஆனால் கனரக வாகனங்கள் அதன் மீது செல்வதால் கற்கள் பெயர்ந்து சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.