12 Feb 2023 1:17 PM GMT
#27088
தேங்கும் கழிவுநீர்
காஞ்சீபுரம் மாவட்டம், மங்காடு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
காஞ்சீபுரம் மாவட்டம், மங்காடு தனியார் மருத்துவ கல்லூரி அருகே(திருமண மண்டபம் எதிரே) மெயின் ரோட்டில் கழிவுநீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் கல்லூரி செல்லும் மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நோய் தொற்று பரவுமோ! என அச்சப்படுகின்றனர். சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்து தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்.