சேலம் மாவட்டம் ஆத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் தமிழகத்தின் மலைவாழிடமான ஊட்டிக்கு செல்ல நேர்வழித்தடமான தம்மம்பட்டி, துறையூர் வழித்தடத்தில் அரசு பஸ் வசதி ஏற்படுத்தப்படவில்லை. ஆத்தூர், தம்மம்பட்டி, துறையூர், நாமக்கல், ஈரோடு, அன்னூர், மேட்டுப்பாளையம் வழியாக புதிய பஸ் வசதியை ஏற்படுத்தி கொடுத்தால் இந்த வழித்தடத்தில் உள்ள அனைத்து பயணிகளும் பயனடைவர். எனவே ஆத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து தம்மம்பட்டி, துறையூர், நாமக்கல், ஈரோடு வழியாக ஊட்டிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பஸ் சேவையை வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சரவணன், ஆத்தூர்.