சேலம் மாவட்டம் எடப்பாடி தங்காயூர் கிராமத்தில் இருந்து திருச்செங்கோட்டுக்கு காலை 9 மணிக்கு ஒரு பஸ் மட்டுமே செல்கிறது. கூட்டம் அதிகமாக இருந்தால் பஸ் நிற்காமல் சென்று விடுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-புவனேஷ்வரி, எடப்பாடி, சேலம்.