மீண்டும் மினிபஸ் இயக்க வேண்டும்

Update: 2023-01-04 16:24 GMT

சேலம் மாவட்டம் இரும்பாலை பஸ் நிறுத்தத்தில் இருந்து மினிபஸ் ஒன்று கீரபாப்பாம்பாடி, கருக்கல்வாடி, தோப்பூர், கோணகப்பாடி, பொத்தனூர் ஆகிய வழித்தடத்தில் தாரமங்கலம் பஸ் நிலையம் வரை சென்று கொண்டு இருந்தது. இதில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தற்போது சில ஆண்டுகளாக அந்த பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே மீண்டும் அந்த மினி பஸ் இயக்க சம்பந்தப்பட் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வம், கீரபாப்பாம்பாடி, சேலம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி