பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

Update: 2023-01-01 17:36 GMT

சேலம் கோரிமேடு அரசு மகளிர் கல்லூரி பஸ் நிறுத்தத்தில் டவுன் பஸ்கள் நிற்காமல் செல்கின்றன. கல்லூரி மாணவிகள் அவசரமாக ஓடி சென்று பஸ் ஏறும் நிலை உள்ளது. இதனால் மாணவிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்ல போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்தோஷ், சேலம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி