போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள்

Update: 2022-11-27 10:37 GMT

நாகை மாவட்டம் திட்டச்சேரி பஸ் நிலையத்தில் ஏராளமான கடைகள், நிறுவனங்கள் உள்ளன. மேலும் பஸ் நிலையத்தில் இருந்து தினமும் பல்வேறு இடங்களுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்த பஸ் நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். இந்த நிலையில் பஸ் நிலையத்தில் ஆங்காங்கே போக்குவரத்துக்கு இடையூறாக இருசக்கரவாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  போக்குவரத்துக்கு இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்