கிருமாம்பாக்கம் பேட்டில் சாக்கடை கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குப்பைகளும் மலைபோல் குவிந்து கிடக்கிறது. கடுமையான துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக நடந்து செல்வோர் மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் அவலநிலை ஏற்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?