சீரமைக்க வேண்டிய சாலை

Update: 2025-06-22 15:39 GMT

தாரமங்கலம் அருகே உள்ள துட்டம்பட்டி வழியாக செல்லும் பைபாஸ் சாலை இடங்கணசாலை பிரிவு வரை சாலை செல்கிறது. இந்த சாலையில் ஒரு சில இடங்களில் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழும் அபாயம் உள்ளது. மேலும் இரவு நேரங்களில் போதுமான வெளிச்சம் இல்லை. எனவே இந்த ஒரு வழி சாலையை சீரமைத்து, மின்விளக்குகள் அமைத்து கொடுத்தால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பயனாக இருக்கும்.

-ராம், தாரமங்கலம்.

மேலும் செய்திகள்