சேலம் செவ்வாய்பேட்டையில் இருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் சாலை ஜல்லி கற்கள் பெயர்ந்து சேதமடைந்து உள்ளது. சாலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பயன்படுத்த முடியாத சாலையை சீரமைக்க வேண்டும்.
-தீனதயாளன், சேலம்.