பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட புஞ்சைவயல் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அதுவும் மழை பெய்துவிட்டால் சாலை பயன்படுத்த முடியாத அளவிற்கு சென்று விடுகிறது. மேலும் விபத்துகளும் அரங்கேறுகிறது. எனவே அந்த சாலைைய உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
பொன்மோகன்தாஸ், புஞ்சைவயல்.