கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கொண்டம்பட்டி கிராமத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன். இவர்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கும் ஊத்தங்கரை தான் வரவேண்டும். கொண்டம்பட்டி கிராமத்தில் இருந்து ஊத்தங்கரை தேசிய நெடுஞ்சாலைக்கு வரும் இரண்டு கிலோமீட்டர் சாலை முற்றிலும் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சந்தோஷ், ஊத்தங்கரை.