சேலம் 4 ரோடு முதல் அஸ்தம்பட்டி செல்லும் வழியில் தனியார் மருத்துவமனை மற்றும் தனியார் பெட்ரோல் பங்க் என ஏராளமான கடைகள் உள்ளன. இந்த பிரதான சாலையின் வளைவில் இரும்பு குழாய் வைக்கப்பட்டுள்ளன. இதன் மீது வாகன ஓட்டிகள் மோதி விபத்துக்குள்ளாகும் அபாய நிலையுள்ளது. எனவே சாலை மற்றும் இரும்பு குழாயில் ஒளிரும் பட்டைகள் பொருத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-சீனிவாசன், தாரமங்கலம்.