கோத்தகிரி அருகே தாந்தநாடு கிராமத்துக்கு செல்லும் தார் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். சில நேரங்களில் வாகன விபத்துகளும் நடைபெற்று வருகிறது. மேலும் வாகனங்களும் பழுதாகி வருகின்றன. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.