சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2023-10-29 08:10 GMT

வெள்ளிமலை பகுதியில் பாலசுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றியுள்ள சாலையில் அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள், முதியோர்கள் காலை, மாலை வேளைகளில் நடைபயிற்சி செய்து வழக்கம். தற்போது இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், நடைபயிற்சிக்கு செல்லும் முதியோர்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமரேசன், வெள்ளிமலை.

மேலும் செய்திகள்