சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-10-08 17:16 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா பாகல்பட்டி ஊராட்சி இரும்பாலை அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி அருகே ஓம்சக்தி நகர் உள்ளது. இந்த நகரில் உள்ள சாலை சேறும், சகதியுமாகவும் காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஜோதிலட்சுமி, ஓம்சக்தி நகர், சேலம்.

மேலும் செய்திகள்