தாமதமாகும் சாலைபணி

Update: 2023-09-27 17:21 GMT

சேலம் பூலாம்பட்டியில் இருந்து எடப்பாடி செல்லும் வழியில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. மேலும் சாலை குறுகி காணப்படுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமமாக உள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே தாமதமாகும் சாலையை பணியை பெரிய விபத்துகள் நடக்கும் முன்பு விரைந்து முடிக்க வேண்டும்.

-அன்பழகன், எடப்பாடி. 

மேலும் செய்திகள்