தார்சாலை வேண்டும்

Update: 2023-09-20 17:43 GMT

சேலம் மாவட்டம் ஏற்காடு தாலுகா கரடியூர் கிராமத்தில் உள்ள வியூ பாயிண்ட் சாலை மண்சாலையாக உள்ளது. இந்த சாலை மழை பெய்தால் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் பொது மக்களும் இந்த வழியாக வாகனங்களில் செல்லும் போது அவதியடைகின்றனர். எனவே மண் சாலையை தார் சாலையாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-அந்தோணி ராஜ், சேலம்.

மேலும் செய்திகள்