சேதம் அடைந்த தார் சாலை

Update: 2025-06-01 18:44 GMT

அணைக்கட்டு ஒன்றியம் பிராமணமங்கலம் ஊராட்சி அகரம், பிராமணமங்கலம் சாலையில் இருந்து ஈடியர்பாளையம் வழியாக தேவிசெட்டிகுப்பம், கட்டுபுடி இணைப்பு தார் சாலையை அதிக அளவில் பொதுமக்கள் பயன்படுத்தி வரூகின்றனர். அந்த வழித்தடத்தில் மினி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அந்தத் தார் சாலை பல வருடங்களாகப் புதுப்பிக்கப்படாமல் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தார் சாலையைச் சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கந்தன், பிராமணமங்கலம்.

மேலும் செய்திகள்