சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அருகே வேகத்தடையை ஒட்டியுள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். வாகனங்களில் வருவோரும் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ஹரி, சேலம்.